முள்ளிவாய்க்கால் மருத்துவமனை மீதான குண்டுவீச்சு
நான்காம் ஈழப்போரில் இலங்கை இராணுவத்தின் தாக்குதல்முள்ளிவாய்க்கால் மருத்துவமனை என்பது வடக்கு இலங்கையில் பாதுகாப்பு மண்டலத்தில் அமைந்திருந்த ஒரு தற்காலிகமாக மருத்துவமனை ஆகும். 2009 ஏப்ரல் 23 ஆம் நாள் முள்ளிவாய்க்கால் மருத்துவமனை மூன்று பீரங்கிக் குண்டுகளால் தாக்கப்பட்டபோது தொடர் ஷெல் மற்றும் வான்வழி தாக்குதல்கள் துவங்கின. ஏப்ரல் 28 மற்றும் 29 ஆகிய இரண்டு நாட்களில் முள்ளிவாய்க்கால் ஆரம்ப சுகாதார நிலையம் பல முறை தாக்கப்பட்டபோது ஆறு பேர் கொல்லப்பட்டனர் மேலும் ஒரு மருத்துவ பணியாளர் உட்பட பலர் காயமடைந்தனர். 29 மற்றும் 30 ஆகிய நாட்களில் முள்ளிவாய்க்கால் மருத்துமனை மீண்டும் பலமுறை தாக்கப்பட்டது, அதில் ஒன்பது பேர் கொல்லப்பட்டு, பதினைந்து பேர் காயமடைந்தனர். மே 2 ஆம் தேதி முள்ளிவாய்க்கால் மருத்துவமனைக்கு எதிராக இரண்டு தாக்குதல்கள் நடத்ததப்பட்டன, ஒன்று காலை 9 மணிக்கு, அடுத்து காலை 10.30 மணிக்கு, இதில் அறுபத்தெட்டு பேர் கொல்லப்பட்டார், மருத்துவ ஊழியர்கள் உட்பட எண்பத்தேழு பேர் காயமடைந்தனர். 12 மே 2009 காலை இதை பீரங்கோ மோட்டார் என்னும் சேணேவி தாக்கியது. இதில் குறைந்தது நாற்பத்தொன்பது நோயாளிகள் கொல்லபட்டனர், ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தர். இந்த தாக்குதல்கள் அனைத்தையும் நிகழ்த்தியது இலங்கை இராணுவம் எனப்படுகிறது; எனினும், இலங்கை அரசு இதற்கு ஒரு ஆதாரமும் இல்லை என்று கூறி மறுத்தது.